திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 29 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி விழா நடைபெறாது எனக் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், வாக்கிய பஞ்சாங்கப்படி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 29 ஆம் தேதி இரவு சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தெளிவுபடுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஆலயத்தில் வரும் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது என்றும், வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 29 ஆம் தேதி சனீஸ்வர பகவானுக்குத் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.