பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மனோஜ் பாரதி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அண்ணாமலை, இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார்.