எத்தனை தேர்தல் வந்தாலும் மத்தியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜல்லிக்கட்டு பிரச்னையை ஒரே நாளில் தீர்த்து வைத்தவர் பிரதமர் மோடி என தெரிவித்தார்.
ஜல் ஜல் ஜல் என்று துள்ளி குதித்து காளைகள் ஓடுகிறது என்றால் அதற்கு பாரத பிரதமர் மோடி தான் காரணம், அவர்தான் ஜல்லிக்கட்டு நாயகர் என்றும் அவர் கூறினார்.