திமுக ஆட்சி வேண்டாம் என்பவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெறும் என தெரிவித்தார்.
அ.தி.மு.க. மட்டும் அல்ல, திமுக ஆட்சி வேண்டாம் என நினைப்பவர்கள் என்டிஏ கூட்டணிக்கு வருவார்கள் என நான் பலமுறை சொல்லி வருவதாகவும், அது நிச்சயமாக நடக்கும் என கூறினார்.