திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மதுபோதைக்கு அடிமையாகி மதுரையில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஊர் திரும்பி அவர் பெரும்பள்ளம் பகுதியில் உள்ள விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
தீடிரென அவர் மாயமாகவே, இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், விடுதியின் பின்புறம் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக
ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.