சென்னை, பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கி பணியாளர் உயிரிழந்தார்.
பாரதிதாசன் 2-வது தெருவில் சென்னை மெட்ரோ சார்பில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்ற வந்தது. திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூரை சேர்ந்த அன்பு என்பவர் உயிரிழந்தார்.
போதிய பாதுகாப்பின்றி பணி மேற்கொண்டதே உயிரிழப்பிற்கு காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.