மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், முதலமைச்சர் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜக-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் அங்குக் கூடியிருந்த பாஜக-வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.