கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கணவனைக் கழுத்தறுத்துக் கொன்ற மனைவி மற்றும் ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உனிச்செட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் திருமணம் தாண்டிய உறவு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில், மனைவி ரூபா மற்றும் ஆண் நண்பர் தங்கமணி ஆகியோரால், கடந்த 2021-ம் ஆண்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில் முடிவில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ரூபா மற்றும் தங்கமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கியது.