ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் கடைவீதிகளில் குவிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நோன்பு காலங்களில் மேல்விஷாரம் பகுதியில், இரவு நேரத்தில் அனைத்து விதமான பொருட்களும் குறைந்த விலையில் வியாபாரம் செய்யப்படுகிறது. அந்த பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
அதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.