கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பெள்ளாதி ஊராட்சி மொள்ளேபாளையம் கிராமத்தில் சாலை அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, நிலத்தை மீட்டனர்.