வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கும் நாடுகளுக்கு, கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலா மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடை விதித்திருந்தது. அது விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் 2023ல் இருந்து அந்த நாட்டிடம் இந்தியா பெட்ரோலியப் பொருட்களை வாங்குகிறது.
இந்த சூழலில், டிரம்ப் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதால் பெட்ரோலியப் பொருட்கள் வினியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.