2009-ம் ஆண்டு இலங்கை ராணுவம் நடத்திய போரில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 4 பேருக்கு இங்கிலாந்து தடைவிதித்துள்ளது.
இலங்கை ஆயுதப்படை முன்னாள் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகோடா, முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் துணை தலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமாக, அவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் செய்யவோ, அங்குள்ள சொத்துகளை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.