ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அழகு நிலையத்தில் யாசகம் கேட்டு வந்தவர், மேஜை மீது இருந்த செல்போனை திருடிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கோபி எம்.ஜி.ஆர். சிலை அருகே அழகு நிலையம் நடத்தி வருகிறார். வாய் பேச முடியாததால், பண உதவி செய்யும்படி நோட்டீஸ் உடன் அங்கு வந்த நபர், பணியாளர்கள் அசந்த நேரத்தில் மேஜை மீதிருந்த செல்போனை திருடிச் சென்றார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.