விழுப்புரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் பணம் பெற்றுக் கொண்டுதான் பொறுப்பு வழங்கப்படுவதாகவும், மாநில பொதுச்செயலாளர் ஆனந்துக்குத் தெரிந்தே நடைபெறுவதாகவும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தவெக நிர்வாகிகள், நகர மற்றும் மாவட்ட பதவி வழங்க விழுப்புரம் தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் குஷி மோகன் 3 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்பதாகத் தெரிவித்தனர்.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், கட்சிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்படுவதாகவும் அவரகூறினர்.
மாநில பொதுச்செயலாளர் ஆனந்துக்குத் தெரிந்தே பணம் வசூல் நடைபெறுவதாகக் கூறிய அவர்கள், தலைவர் விஜய்க்குத் தெரிவிக்கவிடாமல் ஆனந்த் தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், செய்தியாளர் சந்திப்பின்போது தவெக பொறுப்புக்காகப் பணம் கட்டிய காசோலையை நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.