குடியிருக்க இடம் வழங்கக் கோரி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பாதிரிக்குப்பம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காகச் சாலை ஓரத்தில் குடியிருந்த மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
மாற்று இடம் வழங்குவதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்துக் குடியிருக்க இடம் வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.