திருவண்ணாமலை அருகே மாட்டுச் சந்தை குறைவான தொகையில் ஏலம் எடுக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேளுர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேலாகப் பாரம்பரியமாக மாட்டுச் சந்தை நடைபெற்று வருகின்றது. அங்கு வருடாந்திர குத்தகை சந்தை ஏலம் நடைபெற்றது.
அப்போது தனி நபர்கள் சிலர் பேரம் பேசி தங்களுக்குள்ளேயே குறிப்பிட்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்தனர். இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.