திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் அருகே தன்னுடன் மது அருந்த வராத நண்பரைக் கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ராமனும், ராகுலும் நண்பர்களாகப் பழகி வந்ததுடன், ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில், ராமன் மற்றொரு நண்பருடன் சேர்ந்து மது அருந்தச் சென்றுள்ளார்.
இதனை அறிந்து அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல், ராமனைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலைத் தேடி வருகின்றனர்.