திருச்சி மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட உளுந்து விதைகள் தரமற்று இருப்பதாகத் தமிழ் ஜனத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர், துறையூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டன.
அவற்றைப் பயிரிட்டு வளர்த்து வந்த நிலையில், செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் குமார வயலூர் பகுதியில் பாதிக்கப்பட்ட நிலங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.