இந்தியாவில் கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. வரும் 2029 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு உற்பத்தியில் 3 லட்சம் கோடி இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.