மியான்மர் எல்லை விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஐநா பொதுச்செயலரின் சிறப்புத் தூதருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மியான்மர் எல்லையில் நிலவும் சூழல், அகதிகள் நிலைமை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அரசியல் நிலைமை குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.