கன்னியாகுமரி அருகே மூடப்படாத பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட டெரிக் செட்டிகுளம் சாலையில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி காரணமாகப் பள்ளம் தோண்டப்பட்டது.
இந்நிலையில் அந்த சாலையின் வழியாக இருசக்கரத்தில் வாகனத்தில் வந்த இளைஞர் பள்ளம் மூடப்படாததால் அதில் விழுந்து படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.