திண்டுக்கல்லில் அதிகாரிகளை நம்பாமல் பாதாளச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்யும் பணியில் பாஜக கவுன்சிலர் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியில் உள்ள கொத்தனார் சந்து, விவேகானந்த நகர், டெலிபோன் காலனி ஆகிய பகுதிகளில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலன், அதிகாரிகளை நம்பாமல் பாதாள சாக்கடை அடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.