எட்டயபுரத்தில் பாரதியார் இல்லம் சேதமடைந்த நிலையில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் நினைவிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மொழியின் அடையாளங்களில் ஒருவராகிய மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தைப் பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் பாரதியார் பயன்படுத்திய பொருட்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றி, இல்லத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.