யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டிற்குள் கடந்த 24-ம் தேதி தூய்மைப் பணியாளர்கள் உடையணிந்த கும்பல் ஒன்று நுழைந்தது. பொருட்களை அடித்து நொறுக்கி வீட்டிற்குள் கழிவுகளை கொட்டி அக்கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டது.
சவுக்கு சங்கரின் தாயாருடன் வாக்குவாதம் செய்ததுடன் வீடியோ கால் மூலம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கரின் தாய் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் செல்வா, கல்யாண், விஜய், பாரதி, தேவி ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் எழும்பூர் நீதின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், 5 பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.