சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை வைத்துக்கொண்டு டைல்ஸ் ஒட்டியது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை வார்டில் நோயாளிகளை வைத்துக்கொண்டு டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் முகத்திலும் தூசிகள் பறந்து அவதியடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி வனிதா மலர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நோயாளிகளை வார்டில் வைத்துக்கொண்டு பராமரிப்பில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பணிகள் நிறுத்தப்பட்டு நோயாளிகள் வேறு ஒரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.