அரக்கோணம் நகர மன்ற கூட்டத்தில் தேசிய கீதத்திற்கு இடையிலும் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தாமதமாக 10.45 மணியளவில் தொடங்கியது. இதனை அதிமுக கவுன்சிலர்கள் கண்டித்த நிலையில் அவர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி கூட்டம் முடிப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் முன்னே தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால் தேசிய கீதத்தையும் காதுகளில் வாங்கிக் கொள்ளாமல் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.