கோவையில் அரசுப் பேருந்தில் பயணியை ஏற்ற மறுத்த நடத்துநர், பொதுமக்கள் வீடியோ எடுப்பது அறிந்து ஓடிவந்து மன்னிப்பு கேட்டார்.
சிங்காநல்லூரில் இருந்து போடி செல்லும் பேருந்தில் ஏறிய பயணி, வே.கள்ளிப்பாளையத்தில் இறங்க வேண்டும் என நடத்துனரிடம் கூறியுள்ளார். ஆனால் அங்கு பேருந்து நிற்காது எனக்கூறி அவரை இறக்கி விட்டதாக தெரிகிறது.
இதனை பொதுமக்கள் வீடியோ எடுத்த நிலையில், நடத்துநர் ஓடி வந்து, தெரியாமல் இறக்கி விட்டதாக மன்னிப்பு கோரினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.