திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகன திருடர்களை மடக்கிப் பிடித்த போலீசார் 12 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாக புகார்கள் வந்தன. இதற்கிடையே ஆரணி இரும்பேடு கூட்ரோடு அருகில் வாகன தணிக்கையில் போலீசார்
ஈடுபட்டனர்.
அப்போது பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 2 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இரு சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக திருடியது தெரிய வந்தது. ஆரணி அடுத்த பார்வதி அகரம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, சுரேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 12 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.