குளித்தலை அருகே நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
கரூர் மாவட்டம் தேசிய மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு
மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இதில், 13 மந்தைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. விழாவில் முதலில் வந்த 3 மாடுகளின் மீது கன்னிப் பெண்கள் 3 பேர் மஞ்சள் பொடியை தூவி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் வெற்றி பெற்ற மாடுகளின் மந்தைதார்களுக்கு எலுமிச்சை கனி பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து விழாவில் பங்கேற்ற ஆண் பக்தர்கள், உறுமி மேளம் முழங்க தேவராட்டம் ஆடி மகிழ்ந்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மாரியம்மனை மனமுருகி வழிபட்டனர்.