நாமக்கல் அருகே அநாகரீகமாக பேசியதாக கூறி போலீசாரை கிராம மக்கள் சிறை பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியப்பனூர் பகுதியை சேர்ந்த ஆண்டவன் என்பவர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். பொது வழித்தடம் மற்றும் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து வேலி அமைத்ததாக காவலர் ஆண்டவனுக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற பேளுகுறிச்சி போலீசார், காவலர் ஆண்டவனுக்கு சாதகமாக கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தெரிகிறது. மேலும் கிராம மக்களை அநாகரீகமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென போலீசாரை சிறைப் பிடித்தனர். தொடர்ந்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு, சிறைப் பிடிக்கப்பட்ட போலீசாரை அழைத்து சென்றார்.