LPG டேங்கர் லாரிகள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
2025 முதல் 2030 வரையிலான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அன்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது என்றும், மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த LPG லாரி உரிமையாளர்கள், பல்வேறு கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இவை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.