ஆண்டிப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி திருவிழா 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.