சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக சுமார் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோயில் இணை ஆணையர் தலைமையில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் ரொக்கமாக சுமார் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் கிடைத்த நிலையில், சுமார் ஒன்றரை கிலோ தங்கமும், மூன்றரை கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.