பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அனைத்து தொண்டர்களும் நினைப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவர், அதிமுக தமிழகம் முழுவதும் பேரியக்கமாக உருவாக்க இதயபூர்வமாக உழைத்தவர் கருப்பசாமி பாண்டியன் என தெரிவித்தார். அவரின் இழப்பு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறினார்,
கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்தவர் கருப்புசாமி பாண்டியன் என தெரிவித்த அவர், பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகளை அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.