கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பல லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த குமார், சண்முகவேல் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்து கிரையமாக அவரது நிலத்தைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறி குமாரை அழைத்த சண்முகவேல், நிலத்தை மறுகிரையம் செய்துகொண்டு பணத்தைத் தராமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட சண்முகவேல் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.