தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 113 மையங்களில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.
முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 858 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.