திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.