கோவை விமான நிலையத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த நபர் வெளியூர் சென்றுவிட்டு கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கே அவருக்காகக் காத்திருந்த பெண், “தன்னை காதலித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஹனிமூனுக்கு போயிட்டு வந்தியா” எனக் கூறி அந்த நபரைத் தாறுமாறாக வசைபாடினார் .
பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்ற போது , அந்தப் பெண்ணோ “இத்தனை பேர் நிற்கிறீர்கள், காரில் அவன் தப்பித்துச் செல்கிறான் யாரும் அவனைப் பிடிக்க முடியவில்லையா?” எனக் கேட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது எதையும் கூறமுடியாது எனக் கூறிச் சென்றார். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.