தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பத்ராச்சலம் நகரில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அலுவலகம் அருகே 2 மாடிகளைக் கொண்ட கட்டடம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் மீது மேலும் 4 மாடிகளைக் கட்டுவதற்கு உரிமையாளர் முடிவு செய்தார்.
அதன்படி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.