சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது.
வரும் 1ஆம் தேதி மாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படும் என்றும், ஆராட்டு விழாவைத் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்துத் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு விழா 11ஆம் தேதி பகல் 11 மணிக்குப் பம்பை ஆற்றில் நடைபெறும் என்றும், அன்று மாலை 6 மணிக்குக் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இனிவரும் பூஜை நாட்களிலும் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.