இமாச்சலப்பிரதேசம் குலு அருகே உள்ள அடல் சுரங்கப்பாதை பகுதியில் நிலவும் பனிப்பொழிவைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இமாச்சலப்பிரேதசத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படும் நிலையில், அடல் சுரங்கப்பாதை பகுதியில் அடர்த்தியான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
இரண்டு பள்ளத்தாக்குகளுக்கு இடையேயான தூரத்தை 10 நிமிடங்களில் கடந்து செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும், இங்குள்ள இயற்கை அழகு சொர்க்கத்திற்கு நிராகனாது என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.