திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சாணார்பட்டியை சேர்ந்த தேவ சங்கிலி என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். தேவ சங்கிலியின் வீட்டிற்குச் சென்ற அவரது தம்பி ஹரிஹரன், மதுபோதையில் அரிவாளால் அவரை வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த தேவ சங்கிலி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஹரிஹரனைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.