ஜம்மு-காஷ்மீரில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டுச் சென்றது.
பனிஹால் காசிகுன் நவ்யுக் வழியாகச் சென்றபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சுரங்கப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.