வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும். இந்த சட்டத்தின் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு வாரிசு தாரர்களாக 4 பேர் வரை நியமித்துக் கொள்ளலாம்.
மேலும், வங்கியின் மூலதனப் பங்கில் அதன் இயக்குநர்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படும் பங்குத்தொகையின் வரம்பு 5 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.