வக்ஃபு சொத்துக்கள் முறையற்ற வகையில் நிர்வாகம் செய்யப்படுவதை தடுக்கவே புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்படுவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,
வக்ஃபு சொத்துக்கள் முறையற்ற வகையில் நிர்வாகம் செய்யப்படுவதை தடுக்கவே புதிய சட்டத்திருத்த மசோதா என்றும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தொடர்பான கூட்டுக் குழுவில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றனர் எனக் கூறினார்.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளிடமும் கருத்து கேட்கப்பட்டது என்றும் சமூக நீதி பேசும் திமுக அரசு ஒன்றை வசதியாக மறந்துவிட்டது எனத் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
புதிய சட்டத்திருத்தத்தின் படி வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பதில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு என்றும் வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பதில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவுள்ளது பாஜக அரசு என அவர் தெரிவித்தார்.