புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழங்களை முதலமைச்சருக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாள் நிகழ்வு நடைபெற்ற நிலையில், பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழங்களைச் சபாநாயகர், அமைச்சர்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.
சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பலாப்பழங்களைச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.