திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பக்தர்கள் ஒரே நாளில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் வருகை தரும் பக்தர்கள் பல லட்சம் ரூபாய் நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதிக்கு வந்த இலங்கை, சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து நொய்டாவைச் சேர்ந்த ஒருவர் 45 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இதன்மூலம், ஒரே நாளில் ஏழுமலையானுக்கு 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.