ஆதரவற்ற குழந்தைகள் 25 பேரை ரவுண்ட் டேபிள் அமைப்பினர் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றனர்.
பிளைட் ஆப் பேண்டஸி (FLIGHT OF FANTASY) எனும் திட்டம் மூலமாக குழந்தைகள் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
சென்னைக்கு வருகை தந்த குழந்தைகள், கோளரங்கம் மற்றும் அக்குவாரியத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். குழந்தைகளுக்குள் நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக ‘பிளைட் ஆப் பேண்டஸி’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தெரிவித்தார்.