திருச்செந்தூர் அடுத்த உடன்குடியில் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரியம்மாள் புரத்தைச் சேர்ந்த ராபின்ஸ்டன் என்பவரது இரண்டரை வயதுக் குழந்தை மவின், தனது பாட்டியுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பிரவின் என்பவரது இருசக்கர வாகனம், குழந்தை மற்றும் பாட்டி மீது வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.