தஞ்சாவூர் பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கையாக சுமார் 44 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இங்குள்ள 11 உண்டியல்களும் அறநிலையத்துறை துணை ஆணையர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் சுமார் 44 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 18 கிராம் தங்கமும் கிடைத்தது.